இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் திடீர் தகுதி நீக்கம்!

top-news
FREE WEBSITE AD

ஒலிம்பிக் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற வினேஷ் போகத் , உடல் எடையை குறைப்பதற்கு தலை முடி வெட்டப்பட்டதாகவும், உடலில் இருந்து ரத்தம் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் வினேஷ் போகத் எடையை 50 கிலோவாக குறைக்க முடியாமல் போயுள்ளதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வினேஷ் போகத் பொதுவாக 53 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொள்பவர் என்றும், ஆனால் இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் அரையிறுதி போட்டி முடிந்த பிறகு வினேஷ் போகத் 1 கிலோ வரை அதிகமாக இருந்ததாக தெரிகிறது.

எடையைக் குறைக்க உறங்காமல் இரவு முழுவதும் வினேஷ் போஹத் ஸ்கிப்பிங் உள்ளிட்ட வொர்க் அவுட் மேற்கொண்டு உள்ளார்.. உணவையும் தவிர்த்துள்ளார், ஆனால் எடை பரிசோதனையில் வினேஷ் போஹத் 100 கிராம் அளவு அதிக எடையுடன் காணப்பட்டுள்ளார்.

இந்திய ஒலிம்பிக் கமிட்டி வினேஷ் உடல் எடையைக் குறைக்க அவகாசம் கேட்டதாகவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

29 வயதான அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டு குரல் எழுப்பினார்.

'நான் ஒலிம்பிக்கில் விளையாடுவதை தடுக்கும் நோக்கில் பிரிஜ் பூஷன் மற்றும் அவரது ஆதரவாளர் சஞ்சய் சிங்கும் இணைந்து அனைத்து வழியிலும் முயற்சித்து வருகிறார்கள்' என ஏப்ரல் மாதம் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *