இந்திய அணியின் டெஸ்ட் வெற்றியால் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேற்றம்!

- Muthu Kumar
- 25 Nov, 2024
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளின் முதல் டெஸ்ட் போட்டி முடிவுக்குப் பிறகு 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.ஆஸ்திரேலியா அணிக்கு கிடைத்த திடீர் முன்னேற்றத்தில் இருந்து அந்த அணி பின்னடைவை சந்தித்து இருக்கிறது.
நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா பெர்த் மைதானத்தில் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.
இந்திய அணி நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத விதமாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது.
இதைத்தொடர்ந்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை இழந்தது. இரண்டாவது இடத்தில் இருந்து வந்த ஆஸ்திரேலியா அணி முதல் இடத்திற்கு முன்னேறியது. தற்போது இந்திய அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததால் மீண்டும் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திற்கு திரும்ப வந்திருக்கிறது.
தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா என ஐந்து அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. தற்போது இந்திய அணி சிறப்பாக திரும்பி வந்திருப்பதால் எந்த இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.
இருந்தபோதிலும் ஆஸ்திரேலியா அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சொந்த மண்ணிலும், தென் ஆப்பிரிக்கா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளை விளையாடுவதாலும், இந்த இரண்டு அணிகளுக்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா - 61.11
ஆஸ்திரேலியா - 57.69
இலங்கை - 55.56
நியூசிலாந்து - 54.55
தென் ஆப்பிரிக்கா - 54.17
இங்கிலாந்து - 40.79
பாகிஸ்தான் - 33.33
பங்களாதேஷ் - 27.50
வெஸ்ட் இண்டீஸ் - 18.52
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *