மணிப்பூர் தவிர எல்லா நாட்டுக்கும் போகிற மோடி- நாடாளுமன்றத்தில் வைகோ ஆவேசம்!

- Muthu Kumar
- 19 Mar, 2025
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மதிமுக கட்சியின் எம்பி வைகோ மிகவும் ஆவேசமாக பேசினார். மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா.? எங்களுக்கு இருக்கிற ஒரே ஒரு கேள்வி பிரதமர் மோடி ஏன் மணிப்பூர் செல்லவில்லை என்பதுதான். அவர் எங்களை பொறுத்தவரை prime minister அல்ல picnic minister. என்று கூறினார்.
வைகோ மணிப்பூர் விவகாரம் பற்றி பேசியது அவை குறிப்பிலிருந்து நீக்கப்படும் என்று மாநிலங்களவை துணைத் தலைவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து பேசிய வைகோ, எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் தமிழ் மொழி தான். மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.
என் பக்கம் புகுந்து வந்துவிடும் ஹிந்தி. எத்தனை பட்டாளம் கூட்டி வர நேரும். கன்னம் கிழிபட நேரும். கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம். எனக்கு பாராளுமன்றத்தில் 24 வருடம் அனுபவம் இருக்கும் நிலையில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை குப்பைத் தொட்டியில் தான் போட வேண்டும்.
நான் வைகோ என்னை பேசக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்?நான் அண்ணாவின் இயக்கத்தில் இருந்து வந்தவன். நான் இந்தி திணிப்பு இயக்கத்தில் இருந்து உருவானவன். மேலும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஹிந்தி மொழியை ஏற்காத மாநிலங்களின் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி இருக்கிறது என்று கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *