வடகொரியா, தென் கொரியாவை முக்கிய எதிரியாக அறிவித்த நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஒற்றுமை!
- Muthu Kumar
- 01 Aug, 2024
பாரீஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் கொரிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டனர். டேபிள் டென்னிஸின் கலப்பு இரட்டையர் பிரிவில் சீனாவை பின்னுக்குத் தள்ளி தென்கொரியா வெண்கலம் வென்றது. அதேபோல் வடகொரிய வீரர்கள் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
அதனைத் தொடர்ந்து இரு நாடுகளின் வீரர்களும் பதக்க மேடையில் ஒன்றிணைந்தனர். வடகொரியாவின் Ri Jong Sik மற்றும் Kim Kum Yong, தென்கொரியாவின் Shin Yu-bin மற்றும் வெற்றி பெற்ற சீனாவின் Wang Chuqin, Sun Yingha அனைவரும் ஒன்றாக நின்று செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட சாம்சங் போனில் இந்தப்புகைப்படம் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ''இரு கொரியாவின் தேசியக் கொடிகள் ஒரு செல்ஃபியால் சாம்சங் போனுடன் இணைந்தது'' என JongAng IlBo நாளிதழ் கூறியுள்ளது.
மேலும், இரு நாடுகளின் வீரர்களும் ஒன்றாக புகைப்படம் எடுத்த தருணம் தொடர்பான காணொளி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அணு ஆயுதம் ஏந்திய வடகொரியா, தென் கொரியாவை முக்கிய எதிரியாக அறிவித்தது. ஆனால் பாரீஸ் ஒலிம்பிக்கில் கொரிய நாடுகளின் வீரர்கள் ஒற்றுமையுடன் இருப்பதை, ''இதுதான் ஒலிம்பிக்கின் உண்மையான ஆவி'' என வர்ணனையாளர் ஒருவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *