திமுகவுக்கு ஆதரவு- அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் பவன்!

- Muthu Kumar
- 22 Mar, 2025
இது நாள் வரை உதயநிதியின் துணை முதல்வர் பதவி உட்பட பல விஷயங்களில் திமுகவை நேரடியாகவே விமர்சித்து வந்த பவன் பல்யாண் திடீரென திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று சென்னை வருகை தருகிறார்.
மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்திருக்கும் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது குறித்து தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தியது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக, நாம் தமிழர், தமாகா தவிர மற்ற கட்சியினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா , மேற்கு வங்கம் மாநில முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதினார். மேலும், இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து மற்ற மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பை ஏற்று இன்று காலையிலேயே கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் முதல் ஆளாக சென்னை வந்துள்ளார். அதே போல மற்ற கட்சி தலைவர்க்ளும் சென்னை வருகை தர இருப்பதாக ஸ்டாலின் நேற்று வெளியிட்ட காணொளியில் தெரிவித்துள்ளார்.
இதில் முக்கிய திருப்பமாக, மத்தியில் பாஜக கூட்டணியில் உள்ள பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, தொகுதி மறுவரையறை தொடர்பான திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், ஜனசேனா கட்சி சார்பாக அக்கட்சி எம்பி உதய் சீனிவாஸ் இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க சென்னை வரவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஆளும் பாஜகவின் செயல்பாடுகள் மீது எதிர்ப்புகள் கொண்ட திமுக நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில், பாஜக கூட்டணியில் உள்ள ஜனசேனா கட்சி பிரமுகர் பங்கேற்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகி உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *