போலிடெக்னிக்கில் எக்ஸ் -குரோங் பயிற்சி- உயர்கல்வி அமைச்சிடம் அறிக்கை!

- Muthu Kumar
- 19 Mar, 2025
ஈப்போ, மார்ச் 19-
ஈப்போ உங்கு ஒமார் போலிடெக்னிக்கில் மேற்கொள்ளப்பட்ட நுஒ-முரசரபே எனப்படும் பயங்கரவாத நெருக்கடி நிர்வாகம், கையாளுதல் பயிற்சியின் தொடக்கக்கட்ட அறிக்கை புதன்கிழமை உயர்கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்படும்.
அதன் தொடர்பான முழு அறிக்கைக்கு சற்று கால அவகாசம் தேவைப்பட்டாலும். தொடக்கக்கட்ட தகவலை வழங்க தாம் உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காமரின் அரசியல் செயலாளரைத் தொடர்பு கொண்டதாக உங்கு ஒமார் போலிடெக்னிக், பி.யு. ஓ இயக்குநர் டாக்டர் ஷம்சூரி அப்துல்லா தெரிவித்தார்.
சமூக வலைத்தளத்தில் எங்களுக்கு நேர்மறையான, சற்று வருத்தமளிக்கக்கூடிய
பல்வேறு கருத்துகள் கிடைத்துள்ளன. கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. காயம் ஏற்படும் என்பது போன்ற கருத்துக்கள் எழுப்பப்பட்டுள்ளன. இது ஓர் ஒத்திகை அல்லது பயிற்சி என்று மக்கள் அறிந்த பின்னர் இவ்விவகாரம் சற்று தணிந்ததாக நான் நினைக்கின்றேன்." என்றார் அவர்.
நேற்று தொடங்கி இரண்டு நாட்களாக பி.யு.ஓ-இல் நடைபெற்ற எக்ஸ் குரோங் கின் நிறைவு விழாவில் டாக்டர் ஷம்சூரி அவ்வாறு தெரிவித்தார். நன்கு தயார்நிலை பணிகளை மேற்கொண்ட பின்னரே. இந்த எக்ஸ் -குரோங் மேற்கொள்ளப்பட்டாலும் மாணவர் ஒருவர் சிறு காயத்திற்கு ஆளான சம்பவம் குறித்து தங்கள் தரப்பு பி.யு.ஓ-விடமிருந்து முழு அறிக்கைக்காகக் காத்திருப்பதாக சம்ப்ரி நேற்று அறிவித்திருந்தார்.
Laporan awal latihan pengurusan krisis keganasan di Politeknik Ungku Omar akan diserahkan kepada Kementerian Pendidikan Tinggi. Walaupun latihan ini menerima pelbagai reaksi di media sosial, pihak institusi menegaskan ia hanya simulasi. Seorang pelajar mengalami kecederaan ringan, laporan penuh masih dinantikan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *