பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற லியேக் ஹூவுக்கு 10 லட்சம் வெள்ளி ரொக்கம்! மேலும், RM 5000 வாழ்நாள் ஊதியம்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா:, செப்டம்பர் 4: பாராலிம்பிக் பாரிஸ் 2024ல் மலேசியாவின் முதல் தங்கத்தை வென்று தேசத்தைப் பெருமைப்படுத்தியதற்காக, தேசிய ஷட்லர் Cheah Liek Hou வை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் Hannah Yeoh பாராட்டியுள்ளார்.

 இதனை அடுத்து, RM1,000,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று யோஹ் தனது சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில் பகிர்ந்துள்ளார்.

மேலும், Skim Insentif Sukan Olimpik (SITO) திட்டத்தின் கீழ் அவர் வாழ்நாள் முழுவதும் மாதாந்திர உதவித்தொகையாக RM5,000 பெறுவார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரிஸ் 2024 பாராலிம்பிக் போட்டிகளில் மலேசியாவின் முதல் தங்கத்தை வழங்கியதற்காக Cheah Liek Hou பற்றி மிகவும் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பாராலிம்பிக் போட்டிகளில் ‘நெகராகு’ ஒலித்த தருணம் அற்புதமானது என்று வர்ணித்துள்ளார்.

உறுதியளிக்கப்பட்டபடி, லியெக் ஹூ அரசாங்கத்திடமிருந்து ரிம1,000,000 வெகுமதியையும், ஒலிம்பிக் விளையாட்டு ஊக்குவிப்புத் திட்டம் (எஸ்ஐடிஓ) மூலம் வாழ்நாள் மாதாந்திர உதவித்தொகையாக ரிம5,000 வெள்ளியையும் பெறுவார் என்று தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மலேசியரையும் பெருமைப்படுத்தியதற்காக லியேக் ஹூவுக்கு யோஹ் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *