மௌண்ட் ஆஸ்டின் தமிழ்ப்பள்ளியில் 10ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி!
- Muthu Kumar
- 01 Oct, 2024
உலுத்திராம், அக்.1 -
மௌண்ட் ஆஸ்டின் தமிழ்ப்பள்ளியில் 10ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி கடந்த மாதம் 12ஆம் தேதி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆதரவுடன், தலைமையாசிரியர் ஷீலாதேவி தனகோடி தலைமையில் நடைபெற்றது. தேசிய கல்வித்திட்டத்தின் அடிப்படையில், மாணவர்களின் ஆற்றல்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்தோடு, ஆன்மிகம், உள்ளம் மற்றும் உடலை இணைக்கும் திறனை மேம்படுத்துவது இந்த போட்டியின் முக்கிய அடிப்படையாக உள்ளது.
பிரபல தொழிலதிபர் டத்தோ ஜி. பாலசந்திரன் இசைக்குழு அணிகளை கொண்டு வரவேற்கப்பட்ட பின் அவர் நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். மாணவர்கள் கல்வியையும் புறப்பாட நடவடிக்கையையும் சமமாக பின்பற்ற வேண்டும் என அவர் கூறினார். பள்ளிப் புறப்பாட நடவடிக்கைகள் மாணவர்களுக்கு அதிக ஆதரவளிக்கின்றன என்றார்.
முன்னதாக தீப்பந்தம் ஏற்றி போட்டி தொடங்கியது. மாணவர்களின் இல்ல அலங்கரிப்பு, இசைக்குழு அணி, மற்றும் தீப்பந்த ஓட்டம் போன்ற நிகழ்வுகள் வருகையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
இந்த போட்டியின் வெற்றிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜேம்ஸ் செல்வநாதன் மற்றும் அவரது குழுவின் பங்களிப்பையும், பள்ளி வாரியக் குழுத் தலைவர் குணசேகரனின் உதவியையும் ஷீலாதேவி தனகோடி பாராட்டினார். தி.எஸ்.ஜி நிறுவன உரிமையாளரும்,தொழிலதிபர் ஜி. கணேஷ், இந்த நிகழ்விற்கு உதவியிருந்ததற்கு பற்றி நன்றி கூறப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளியின் வளர்ச்சிக்காக எப்போதும் கைகோக்கும் என ஜேம்ஸ் செல்வநாதன் தெரிவித்தார்.
போட்டி இறுதியில் பச்சை இல்லம் வெற்றி பெற்றது, மேலும் சிவப்பு இல்லம் சிறந்த அணி வகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு ஒரு வாரம் முன்பு 50 மாணவர்கள் கொண்ட அப்பள்ளி பாலர் பள்ளி மாணவர்களுக்கு “சுக்காநேக்கா” நடந்தது, ஜி. கணேஷ் சிறப்பு விருந்தினராக வந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *