ஹரிராயா நாள்களில் 27 லட்சத்து 70 ஆயிரம் வாகனங்கள்! முக்கியச் சாலைகளை ஆக்கிரமிக்கும்!

- Shan Siva
- 27 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 27: வரவிருக்கும் ஐடில்ஃபிட்ரி விடுமுறை
நாட்களில், முக்கிய விரைவுச்
சாலைகளில் போக்குவரத்து நாளொன்றுக்கு 27 லட்சத்து 70 ஆயிரம் வாகனங்களாக
அதிகரிக்கும் என்று மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் (LLM) எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்
குழுமத்தின் கீழ் 21 லட்சம் வாகனங்கள் விரைவுச் சாலைகளைப் பயன்படுத்தும் என்றும்,
அதைத் தொடர்ந்து KL-காராக் விரைவுச் சாலை (KLK) இல் 216,000 வாகனங்கள்;
மேற்கு கடற்கரை விரைவுச் சாலை (WCE) இல் 176,000; கிழக்கு கடற்கரை விரைவுச் சாலை 1 (LPT1) இல் 156,000 மற்றும் LPT2 இல் 70,000 வாகனங்கள்,
ஐடில்ஃபிட்ரி பண்டிகை காலத்தின் உச்ச நாட்களில்
பயன்படுத்தப்படும் என்றும் நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 2 முதல் 4 வரை கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பள்ளி விடுமுறைகளைக்
கருத்தில் கொண்டு, வியாழக்கிழமை
முதல் கிழக்கு கடற்கரை, வடக்கு மற்றும்
தெற்குப் பகுதிகளை நோக்கி தலைநகரிலிருந்து புறப்படும் போக்குவரத்து அதிகரிக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஏப்ரல் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் தலைநகருக்குத் திரும்பும்
போக்குவரத்து உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
LLM menjangkakan 2.77 juta kenderaan sehari di lebuh raya utama semasa Aidilfitri. PLUS mencatat 2.1 juta kenderaan, diikuti KLK, WCE, LPT1, dan LPT2. Trafik dijangka memuncak pada 2-6 April. LLM melaksanakan langkah mengurangkan kesesakan termasuk larangan penutupan lorong lebuh raya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *