இளம்பெண்ணைக் கடத்திய மூவருக்குப் பிரம்படியுடன் சிறை தண்டனை!

top-news

மார்ச் 26,

28 வயது பெண்ணைச் செம்பனை தோட்டத்தில் கடத்தி வைத்து பிணை தொகையாக RM400,000 கேட்டு மிரட்டிய மூவருக்கும் இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 8 ஆண்டுகளுக்கு முன்னர் குற்றத்தைப் புரிந்த 40 வயது Mohd Zairol Nizan Md Nor, 42 வயது Mohd Khairul Anuar Musa, 25 வயது Abdul Hadi Abu Bakar ஆகியோர் கடந்த 2020 ஜூலை கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

ஜனவரி 24, 2017 அதிகாலை 3 மணிக்கு 28 வயதான இளம்பெண்ணைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டியதை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டதால் 40 வயதான Mohd Zairol Nizan என்பவருக்கு 7 பிரம்படிகளுடன் சிறையும், Mohd Khairul Anuar , Abdul Hadi எனும் இருவருக்கும் 5 பிரம்படிகளுடன் சிறையும் வழங்கி உயர்நிதிமன்றம் உத்தரவிட்டது.

Tiga lelaki dihukum penjara dan sebatan kerana menculik seorang wanita berusia 28 tahun di Ladang Chemperna serta menuntut wang tebusan RM400,000. Kes berlaku pada 2017, dan mereka ditangkap pada 2020 sebelum mengaku bersalah di Mahkamah Tinggi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *