நில மோசடியில் சிக்கிய 18 பேர் கைது! RM 3 Million இழப்பு!
- Thina S
- 10 Jun, 2024
நில வணிக மோசடியில் சம்மந்தப்பட்ட 18 உள்ளூர் ஆடவர்களைத் தேசிய வணிகக் குற்றப்புலனாய்வுத் துறை கைது செய்துள்ளதாக அதன் தலைமை இயக்குநர் Dato’ Sri Ramli bin Mohamed Yoosuf தெரிவித்தார். 6 பெண்கள் உட்பட 18 உள்ளூர்வாசிகளும் SELANGOR, PERAK, SABAH போன்ற மாநிலங்களில் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து நில வணிகங்களில் மோசடி செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. முறையான ஆவணங்கள் இல்லாது, அரசு நிறுவனங்களைத் தனியார் நிறுவனங்கள் எனும் பெயரில் தனியார் வணிகர்களிடம் அரசு நிலங்களை வாடகைக்கு விட்டு ஆண்டுக்கு RM75,000.00 முதல் RM108,131.93 வரையில் வசூல் செய்துள்ளதாக தேசிய வணிகக் குற்றப்புலனாய்வுத் துறையின் தலைமை இயக்குநர் Dato’ Sri Ramli bin Mohamed Yoosuf தெரிவித்தார்.
இதில் முக்கியமாக Industri Kecil dan Sederhana (IKS) Sabah எனப்படும் சிறு குறு நடுத்தர உள்ளூர் வணிகர்கள் மேம்பாட்டு ஆணையத்தின் முகவர் இலச்சினைகளைப் பயன்படுத்தி உள்ளூர் வணிகர்களைக் கடந்த 2019 முதல் ஏமாற்றி வந்தது தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 18 பேர் சம்மந்தப்பட்ட 15 வங்கி கணக்குகளிலிருந்து RM69,796.91 ரிங்கிடும் RM75,000.00 மதிப்பிலான் TOYOTA HILUX ரக வாகனமும், தனியார் கூட்டு நிறுவனத்தின் வங்கி கணக்கிலிருந்து RM108,131.93 ரிங்கிட் என மொத்தமாக சுமார் 3 மில்லியன் ரிங்கிட் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக தேசிய வணிகக் குற்றப்புலனாய்வுத் துறையின் தலைமை இயக்குநர் Dato’ Sri Ramli bin Mohamed Yoosuf தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *