RM 52,250.00 மதிப்பிலானத் தேங்காய்களைக் கடத்திய ஆடவர் கைது!

top-news

மார்ச் 26,

தாய்லாந்து மலேசியா எல்லை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் முறையான ஆவணங்கள் இல்லாமல் பயணித்த லாரியிலிருந்து RM 52,250.00 மதிப்பிலான 450 தேங்காய்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 26 வயது லாரி ஓட்டுநரும் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தேசிய எல்லை பாதுகாப்பு கடத்தல் பிரிவு தெரிவித்துள்ளது. 

நள்ளிரவு 12.30 மணியளவில் சம்மந்தப்பட்ட லாரி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் சோதனையின் போது லாரியில் இருந்த தேங்காய்கள் எங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்றும், அனுப்பப்படும் முகவரியும் இல்லாமல் இருந்ததால் 26 வயது லாரி ஓட்டுநர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang pemandu lori berusia 26 tahun ditahan kerana menyeludup 450 biji kelapa bernilai RM52,250 tanpa dokumen sah di sempadan Thailand-Malaysia. Lori yang dikesan berhenti di tepi jalan itu diperiksa, dan kelapa tersebut dirampas untuk siasatan lanjut

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *