பூகம்ப நிவாரணப் பணிக்காக மலேசியாவின் 50 பேரடங்கிய குழு இன்று மியன்மார் செல்கிறது!

- Muthu Kumar
- 30 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 30 -
பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பேரிடர் நிவாரண உதவிகளை வழங்குவதற்காக, 50 உறுப்பினர்கள் அடங்கிய மனிதாபிமான உதவிக் குழுவை மலேசியா இன்று ஞாயிற்றுக்கிழமை மியன்மாரின் யங்கூனுக்கு அனுப்பி வைக்கிறது.
தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனத்தின் (நட்மா) இரண்டு குழுக்களை அங்கு அனுப்பி வைப்பதென்று முன்பு செய்யப்பட்டிருந்த முடிவுக்கு பதிலாக ஒரே குழுவாக இக்குழு மியன்மார் செல்ல விருப்பதாக, விஸ்மா புத்ரா தெரிவித்தது.பத்து பேரடங்கிய நட்மாவின் முதல் குழு நேற்று மியன்மார் செல்ல விருப்பதாக முன்னதாக கூறப்பட்டிருந்தது. நாற்பது பேரடங்கிய இரண்டாவது குழு இன்று செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த 50 பேரும் ஒரே குழுவாக இன்று அங்கு செல்ல முடிவு செய்யப்பட்டது.
"பிராந்திய ஒத்துழைப்புக்கான தனது உறுதிப்பாட்டில் மலேசியா உறுதியாக இருக்கிறது மற்றும் ஆசியான் முழுவதும் மனிதாபிமான நிவாரணம் மற்றும் பேரிடர் நிர்வாக முயற்சிகளுக்கு, அர்த்தமுள்ள பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கும் என்று நேற்று சனிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
மனிதாபிமான உதவிகள் சரியான நேரத்துடனும் முறையாகவும் மற்றும் ஆக்கப்பூர்வமான முறையிலும் சென்றடைவதை உறுதிப்படுத்த, பேரிடர் நிர்வாகம் மீதான மனிதாபிமான உதவிக்கான ஆசியான் ஒத்துழைப்பு மையத்தின் மூலம் ஆசியான் உறுப்பு நாடுகள் அணுக்கமாக ஒத்துழைக்கும் என்றும் விஸ்மா புத்ரா கூறியது.
"பகிரப்பட்டுள்ள பொறுப்பின் உணர்வு அடிப்படையில், இந்த மீட்பு மற்றும் மீட்சித் தன்மை காலத்தில் மலேசியா பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களுக்கும் பக்க பலமாக இருக்கும் என்றும் அது கூறியது.
மியன்மாரில் பூகம்பத்தினால் ஏற்பட்டுள்ள பேரழிவு குறித்து தமது ஆழ்ந்த கவலைவை நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை வெளிப்படுத்தி இருந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நடந்து வரும் மனிதாபிமான மற்றும் மீட்சி முயற்சிகளை ஆதரிக்க மலேசியா தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
Malaysia menghantar satu pasukan bantuan kemanusiaan seramai 50 anggota ke Yangon, Myanmar, bagi membantu mangsa gempa bumi. Keputusan ini menggantikan rancangan asal menghantar dua pasukan berasingan. Malaysia menegaskan komitmennya terhadap kerjasama serantau dalam pengurusan bencana dan bantuan kemanusiaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *