இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான 60 விமானங்களின் சேவை ரத்து!
- Muthu Kumar
- 03 Nov, 2024
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான 60 விமானங்களின் சேவையை ரத்து செய்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.கிறிஸ்துமஸ் , ஆங்கில புத்தாண்டு உள்ளிட்டவை வர இருக்கும் நிலையில் ஏராளமானவர்கள் இந்தியா அமெரிக்கா இடையே பயணம் செய்யும் காலம் இது.
இந்த சமயத்தில் ஏர் இந்தியா நிறுவனம் திடீரென 60 விமானங்களின் சேவையை ரத்து செய்துள்ளது. பராமரிப்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட தங்களுடைய விமானங்கள் தாமதமாக வந்து சேர்வது, மேலும் விமான பாகங்கள் போதிய அளவில் கிடைக்காமல் இருப்பது ஆகியவையே 60 விமானங்களின் சேவைகளை ரத்து செய்வதற்கு காரணம் என ஏர் இந்தியா கூறியுள்ளது.இதனால் நவம்பர் மாதம் மத்தியில் மற்றும் டிசம்பர் மாதம் முழுவதும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான விமான போக்குவரத்து தடைபட இருக்கிறது. குறிப்பாக டெல்லியில் இருந்து சிகாகோ, டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ ,டெல்லியில் இருந்து வாஷிங்டன் ,மும்பையில் இருந்து நியூயார்க் ஆகிய வழித்தடங்களில் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பயணிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் சந்தேகங்களுக்கு பயணிகள் தங்களை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.ரத்து செய்யப்பட்ட விமானங்களின் விவரங்கள் :டெல்லி-சிகாகோ (AI126): 15, 20, 22, 29 நவம்பர்; 4, 6, 11 டிசம்பர்சிகாகோ-டெல்லி (AI127): 15, 20, 22, 29 நவம்பர்; 4, 6, 11 டிசம்பர்டெல்லி- நியூயார்க் (AI105/AI106): 5 டிசம்பர்டெல்லி- சான் பிரான்சிஸ்கோ (AI173/AI174): 15, 18, 26 நவம்பர்; 2, 9, 13 டிசம்பர்டெல்லி- வாஷிங்டன் (AI103/AI104) 16 நவம்பர் - 31 டிசம்பர்மும்பை - நியூயார்க் (AI119/AI116): 19 நவம்பர், 9 டிசம்பர்.
மேலும் இந்த விமான சேவை ரத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் எந்த ஒரு கூடுதல் கட்டணமும் செலுத்தாமல் தங்களுடைய பயண தேதியை மாற்றி அன்றைய தினத்தில் இயங்கும் விமானங்களில் பயணம் செய்யலாம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.மேலும் ஏர் இந்தியா நிறுவனத்துடன் கூட்டாண்மையோடு இயங்கும் நிறுவனங்களில் பயணிகள் தங்களுடைய டிக்கெட்டை புக் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயண தேதியை மாற்ற விரும்பாத பயணிகளுக்கு முழுமையான டிக்கெட் கட்டணமும் திரும்ப வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம் நிலைமை சீராக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *