இவ்வாண்டு ஓப்ஸ் செலாமாட்டில் 6,957 போலீஸ்காரர்கள் ஈடுபடுவர்!

- Muthu Kumar
- 24 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 24-
இவ்வாண்டு நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஒப்ஸ் செலாமாட் 24 நடவடிக்கைகளில் 6,957 போலீஸ்காரர்களை, மத்திய போலீஸ் போக்குவரத்து அமலாக்கம் மற்றும் விசாரணைப் பிரிவு ஈடுபடுத்தப்படுத்த இருக்கிறது.
சாலை விபத்துகளையும் மரணச் சம்பவங்கள் ஏற்படுவதையும் குறைக்கும் நோக்கத்தில், ஒப்ஸ் செலாமாட் 24 நடவடிக்கை, இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரையில் நாடு முழுமையிலும் மேற்கொள்ளப்பட விருப்பதாக, அப்பிரிவின் இயக்குநர் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.
"அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் 25 இடங்களும் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் 46 இடங்களும் அடையாளம் காணப்பட்டிருப்பதோடு, அங்கு தொடர்ந்து
கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று. கோலாலம்பூர், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது யுஸ்ரி தெரிவித்தார்.
சாலைகளைப் பயன்படுத்தும் போது சாலை விதிமுறைகளை அவசியம் பின்பற்றுவதுடன், பொறுமை காக்குமாறும் கண்ணியத்துடன் நடந்து கொள்ளுமாறும் சாலைகளைப் பயன்படுத்துவோருக்கு அவர் அறிவுறுத்தினார்.சொந்த ஊயர்களுக்குத் தங்களின் பயணங்களைத் தொடங்குவதற்கு முன்னரே தங்களின் வாகனங்கள் நல்ல நிலையில் இருப்பதையும்மோட்டார் வாகனமோட்டிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
“பயணங்களைத் தொடங்குவதற்கு முன்னர் வானமோட்டிகளுக்குப் போதுமான உறக்கம் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்" என்று கூறிய அவர், மோட்டார் வாகனமோட்டிகளின் நடத்தைகளும் மிக முக்கியமானவையாக இருப்பதாகத் தெரிவித்தார்.
**Ringkasan Berita (40 Perkataan):**
Seramai 6,957 pegawai polis akan terlibat dalam Ops Selamat 24 dari 29 Mac hingga 3 April bagi mengurangkan kemalangan jalan raya sempena Aidilfitri. Polis mengenal pasti 25 lokasi sesak dan 46 kawasan kemalangan untuk pemantauan ketat serta menasihatkan pengguna jalan raya berhati-hati.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *