ஜொகூரில் 800 சாலைக் குழிகள்!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

ஜொகூர் பாரு, மார்ச்.24-

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த - சாலைகளில் ஏற்பட்ட 800 குழிகளை சரிசெய்ய ஜொகூர் மாநில அரசு ரி.ம560,000 ஒதுக்கியுள்ளது. ஜொகூர் மாநிலப் பொது வேலைகள், போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் தொடர்பு ஆணைக்குழுத் தலைவர் முகமட் பாஸ்லி முகமட் சாலே கூறுகையில், இந்தப் பணிகள் நேற்று முன்தினம் இரவு தொடங்கியதாகவும் இன்று முடிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

“இந்தச் சீரமைப்புப் பணிகள் ஜொகூர் பாரு, கோத்தா திங்கி, பொந்தியான், குளுவாங், கூலாய் ஆகிய ஐந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக மொத்தமாக ரி.ம560,000 ஒதுக்கப்பட்டுள்ளது. “இவற்றில் பெரும்பாலான 500 வெள்ள பாதிப்பு இடங்கள் ஜொகூர் பாரு மாவட்டத்தில் உள்ளன. “சமன்வயக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி,குறித்த காலக்கெடுவிற்குள் அனைத்து சீரமைப்பு பணிகளும் நிறைவு செய்யப்படும்," என்று அவர் கூறினார்.

நேற்று பாசீர் கூடாயில் உள்ள ஜாலான் பெசாரில் சாலைகளில் ஏற்பட்ட குழிகளை சரிசெய்யும் பணிகளை பார்வையிடும் போது அவர் இதனை தெரிவித்தார். மொகமட் பாஸ்லி, அவ்விடத்திலிருந்து தொடர்ந்து நல்ல வானிலை நிலவினால் சீரமைப்பு பணிகள் திட்டமிட்டபடி நடைபெறலாம் எனக் கூறினார்.

“வானிலை சாதகமாக இருக்க வேண்டும் என நாங்கள் பிரார்த்திக்கிறோம், ஏனெனில் விரைவில் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட உள்ளது. இது சாலையைப் பயன்படுத்தும் மக்களுக்கு வசதியாக இருக்கும்." என்றார். அதேவேளை, கோத்தா திங்கி மாவட்டத்தில் உள்ள பெல்டா ஆயர் தவார் 1 பகுதியில் இடிந்த பாலம் மற்றும் சுங்காய் லாயாவ் பாலத்தின் கட்டமைப்பு சேதமடைந்துள்ள நிலையில், அவற்றை சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Kerajaan Johor memperuntukkan RM560,000 untuk membaiki 800 lubang jalan akibat banjir di lima daerah, termasuk Johor Bahru dan Kota Tinggi. Kerja pembaikan bermula kelmarin dan dijangka selesai segera. Projek pemulihan jambatan di Felda Ayer Tawar 1 juga akan dimulakan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *