ஜொகூர் பாருவில் 20 அணிகள் பங்கேற்ற இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான கபடிப் போட்டி!
- Muthu Kumar
- 03 Oct, 2024
ஜொகூர்பாரு, அக். 3-
ஜொகூர் பாரு மாவட்டத்தில் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான கபடிப் போட்டி அண்மையில் ஜொகூர் பாரு இளைஞர் விளையாட்டு மையத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன, அவை 18 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு போட்டியாளரும் முழு உற்சாகத்துடன் விளையாடினர்.
பெண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் தாமான் யுனிவர்சிட்டி இடைநிலைப் பள்ளி மற்றும் கான்வெண்ட் இடைநிலைப் பள்ளிகள் மோதின. ஆண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் தாமான் யுனிவர்சிட்டி இடைநிலைப் பள்ளி மற்றும் டத்தோ ஜஃபார் இடைநிலைப் பள்ளிகள் மோதின.
இரு பிரிவுகளிலும் போட்டியாளர்கள் கடுமையான போட்டியைக் சந்தித்தனர். பெண்கள் பிரிவில் ஐந்தாவது இடத்தை டான்ஸ்ரீ ரஹ்மாட் இடைநிலைப் பள்ளி, நான்காவது இடத்தை இம்பியான் இமாஸ் இடைநிலைப் பள்ளி, மூன்றாவது இடத்தை ஸ்ரீ பெர்லிங் இடைநிலைப்பள்ளி, இரண்டாவது இடத்தை தாமான் யுனிவர்சிட்டி இடைநிலைப் பள்ளி பெற்றன. கான்வெண்ட் இடைநிலைப் பள்ளி இப்பிரிவில் முதல் நிலையில் வென்றது.
ஆண்கள் பிரிவில் ஐந்தாவது இடத்தை ஸ்ரீ பெர்லிங் இடைநிலைப் பள்ளி, நான்காவது இடத்தை இம்பியான் இமாஸ் இடைநிலைப் பள்ளி, மூன்றாவது இடத்தை டான்ஸ்ரீ ரஹ்மாட் இடைநிலைப் பள்ளி, இரண்டாவது இடத்தை தாமான் யுனிவர்சிட்டி இடைநிலைப் பள்ளி ஆகியவை பெற்றன. டத்தோ ஜஃபார் இடைநிலைப் பள்ளி இப்பிரிவில் முதல் நிலையில் வெற்றி பெற்றது.
பிகேஆர் தெப்ராவ் கிளை தகவல் பிரிவுத் தலைவரும், சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரியுமாவார் தனேஷ் குமார்.இக்கபடிப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். வெற்றியாளர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.
மடானி அரசு பாரம்பரிய விளையாட்டுகளைப் பாதுகாக்கத் தன்னிச்சையான உறுதியைக் கொண்டுள்ளது, குறிப்பாக சிலம்பம் மற்றும் கபடி போன்ற விளையாட்டுகளை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. கபடி, 2024ஆம் ஆண்டின் சுக்மா போட்டியில் போட்டித்திறன் கொண்ட விளையாட்டாக முதன்முறையாக அறிமுகமாகி, 2026ஆம் ஆண்டின் சுக்மாவில் பதக்கப் போட்டியாக சேர்க்கப்படும் எனக் கூறினார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *