சபா கவர்னரின் பிறந்த நாள் கொண்டாட்டம் 3 மாதங்களுக்கு நடைபெறாது!

- Muthu Kumar
- 28 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 28
சபா மாநில கவர்னரின் அதிகாரப்பூர்வ பிறந்த நாளை முன்னிட்ட கொண்டாட்டம் மூன்று மாதங்களுக்கு நடைபெற விருப்பதாக கூறப்படுவதை, அம்மாநில அரசாங்கம் முற்றாக மறுத்திருக்கிறது.
உண்மையில் ஒரு மாதத்திற்குள் மொத்தம் ஏழு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறும் என்று, மாநில துணை முதலமைச்சர் ஜோசிம் குன்சலாம் தெரிவித்தார்.
மாநில கவர்னரின் அதிகாரப்பூர்வ பிறந்த நாளை முன்னிட்டு, ஏழு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் மட்டுமே ஜூன் மாதத்தில் நடத்தப்படும்.அவரின் பிறந்த நாள் மார்ச் 30ஆம் தேதி என்பதால், ஒரு நாள் பொது விடுமுறை மட்டுமே வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் 12 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருந்த வேளையில், இவ்வாண்டில் அவை ஏழு நிகழ்ச்சிகளாக குறைக்கப்பட்டிருப்பதாகவும் இதன் மூலம் மொத்த செலவில் 30 விழுக்காடு குறைக்கப்பட்டு இருப்பதாகவும் நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஜோசிம் தெரிவித்தார்.
Kerajaan negeri Sabah menafikan dakwaan bahawa sambutan rasmi hari lahir Gabenor Sabah akan berlangsung selama tiga bulan. Timbalan Ketua Menteri, Joachim Gunsalam, menjelaskan bahawa hanya tujuh acara rasmi akan diadakan dalam bulan Jun, dengan pengurangan perbelanjaan sebanyak 30%.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *