100 பிளஸ்' நிறுவனம் நல்லாதரவுடன் இளம் வீரர்களுக்கான பூப்பந்தாட்டப் போட்டி!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.ரமணி)

பினாங்கு, அக். 26-

பினாங்கு மாநிலத்தின் 12 வயதிலிருந்து 16 வயதிற்கும் இடைப்பட்ட இளம் வீரர்கள் பங்கு கொள்ளும் பூப்பந்தாட்டப் போட்டிக்கு, "100 பிளஸ்' சுவைபான நிறுவனம் நல்லாதரவு வழங்கியிருப்பது தொடர்பில், மாநிலத்தின் பூப்பந்தாட்ட சங்கத்துடன் ஒன்றிணைந்து, பினாங்கு மாநில இளைஞர் விளையாட்டுத் துறை மற்றும் சுகாதாரப் பிரிவுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய், மன நிறைவுடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பூப்பந்தாட்டத் துறையில் ஆண் பெண் இருபாலர் என. இளம் விளையாட்டாளர்களை ஊக்குவிக்கும் முயற்சிக்கு, 100 பிளஸ் நிறுவனத்தின் இந்தப் பேராதரவு, உண்மையில் பாராட்டத்தக்கதோர் உந்துதலாகுமென்றும், மாநிலத்தின் இளம் பூப்பந்தாட்ட வீரர்கள் மத்தியில், இது உற்சாகத்தை அளித்து, அவர்களின் வேகத் • திறமைக்கு தூண்டுதலையும் விளைவிக்குமென்பதில் ஐயமெதுவும் இல்லையென்று அவர் வரவேற்பு கூறியுள்ளார்.

கடந்த 23ஆம் நாள் தொடங்கி, எதிர்வரும் 27ஆம் நாள் வரையில், இங்கு புக்கிட் டம்பார் பகுதியில் அமைந்திருக்கும் பூப்பந்தாட்ட அரங்கத்தில் நடைபெற்று வரும் இந்த பூப்பந்துப் போட்டிக்கு, 100 பிளஸ் சுவைபான நிறுவனத்துடன், மாநில பூப்பந்து சங்கமும், இங்கு செயல்பட்டு வரும் பற்பல

வணிக நிறுவனங்களும், தாராள உணர்வுமிக்க கொடை நெஞ்சர்களும் தத்தம் பங்காக, கணிசமான நிதியாதரவு வழங்கி இப்போட்டி சிறப்புடன் நடைபெற ஆதரவளித்திருப்பது தொடர்பிலும், டேனியல் தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி யுள்ளார்.

பூப்பந்தாட்டத் துறையில் தற்போது இளம் வீரர்களின் ஈடுபாடும் பங்களிப்பும் மெய்சிலிர்க்கத்தக்க வகையில் மேம்பாடு கண்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக, பாராட்டுத் தெரிவித்த அவர்,தற்காலத்தில் ஆரம்பம் மற்றும் இடைநிலைப் பள்ளிகளின் மாணவர்களில் அதிகமானோர். இவ்விளையாட்டில் ஆர்வமுடன் களமிறங்குவதை பரவலாகக் காண முடிவதால், எதிர்வரும் காலங்களில் இவ்விளையாட்டு முன்னிலை வகிக்கும் அளவில், சிறப்புறுமென்று தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய தினம் இப்போட்டிக்கு நிதியாதரவு வழங்கிய வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும். தனிநபர் நன்கொடையாளர்களுக்கும் டேனியல் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்த வேளையில், போட்டியில் பங்கேற்கும் வீரர்களுடனும் அவர்தம் பயிற்சி யாளர்களுடனும் அளவளாவி, வெற்றிக்கு தூபமிடும் வாழ்த்து களையும் உடன் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாநிலப் பூப்பந்து சங்கத் தலைவர் டத்தோ கா காவ் கியாக். நெகிரி செம்பிலான் மாநில பூப்பந்து சங்கத்தின் துணைத் தலைவர், டத்தோ இங் சின் சாய் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *