அந்நியத் தொழிலாளர்களை ஜாமீனில் விடுவிக்க மாஜிஸ்திரேட் உத்தரவு!

- Muthu Kumar
- 29 Mar, 2025
(டிகே.மூர்த்தி)
தெலுக் இந்தான், மார்ச் 29-
சாலை கலவரத்தில் ஈடுபட்டதற்காக 22 முதல் 51 வயதுடைய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் குழுவொன்று நேற்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அவர்கள் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 147 இன் கீழ் குற்றப் பத்திரிக்கை வாசிக்கப்பட்டது.
ஆனால், அவர்களால் புரிந்து கொள்ள முடியாததால், நீதிமன்ற விசாரணை அறையில் எந்த வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இரண்டு மலேசியர்களின் உத்தரவாதத்துடன் தலா வெ.5,000 ஜாமீனில் விடுவிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டுள்ள அந்த அந்நியத் தொழிலார்கள் இங்குள்ள தொழிற்சாலையொன்றில் பணி புரிகின்றனர். அந்நிலையில் அவர்களது பணியிடத்திற்கு அருகில் கடந்த 14.3.2025 இல் நடந்த சாலை விபத்தில் சக ஊழியர் ஒருவர் பலியானார்.
அதில் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக இந்த கலவரங்கள் தூண்டப்பட்டதாக மாவட்ட காவல் துறை தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் குழுவினர் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இந்த வழக்கை மீண்டும் நடத்துவதற்கு உதவியாக வெளிநாட்டு மொழி பெயர்ப்பாளரை அமர்த்துவதுடன் மாஜிஸ்திரேட் நதியத்துல அதிரா அஸ்மான் முன்னிலையில் வரும் 28.4.2025 இல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால்,2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க சட்டம் வகை செய்கிறது என்றும் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி டாக்டர் பக்ரி ஜைனால் அபிடின் செய்தியாளர்களுக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Sekumpulan pekerja asing berumur 22 hingga 51 tahun dihadapkan ke Mahkamah Majistret Teluk Intan atas pertuduhan terlibat dalam rusuhan jalan raya. Mereka dilepaskan dengan jaminan RM5,000 setiap seorang dan kes akan disambung pada 28 April 2025 dengan penterjemah bahasa asing.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *