கலைவாணி சுழற்கிண்ணக் கால்பந்து போட்டி 2024!
- Muthu Kumar
- 22 Oct, 2024
குரூண், அக். 22-
கெடா பாடாங் லெம்பு தோட்டத்தில் அமைந்துள்ள கலைவாணி தமிழ்ப்பள்ளி, கோல மூடா யான் மாவட்ட ரீதியிலான கலைவாணி சுழற்கிண்ணக் கால்பந்து போட்டி ஒன்றை முதல் முறையாக ஏற்பாடு செய்து நடத்தியது.மாணவர்களின் கால்பந்து விளையாடும் ஆற்றலை வெளிக்கொணர இப்போட்டியினைக் கலைவாணி தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் முன்னின்று நடத்தியது.
பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி த.ஜெயலட்சுமியின் ஆதரவாலும், புறப்பாட நடவடிக்கைத் துணைத் தலைமையாசிரியர் கார்த்திக் சோமுநாயுடு ஆலோசனையாலும் முயற்சியாலும், பள்ளியின் துணைத் தலைமையாசிரியர்கள் திருமதி சூ. மஞ்சுளா, இரா. பிரகாஷ் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பாலும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆதரவாலும், முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்பாலும் இச்சுழற் கிண்ணப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை இனிதே நடைபெற்றது.
கலைவாணி தமிழ்ப்பள்ளியோடு, மா ஹ்வா சீனப்பள்ளி சுங்கை கித்தா தமிழ்ப்பள்ளி துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி,ஸ்கார்புரோ பிரிவு 2 தமிழ்ப்பள்ளிகளும், சுழற்கிண்ணக் கால்பந்து போட்டியில் கலந்து சிறப்பித்தன.கோல மூடா மாவட்ட தொடக்கப் பள்ளி பாலர் பள்ளி துணை கல்வி அதிகாரி கணேசன் பலராமன் இப்போட்டியினை அதிகாரப்பூர்வமாக சிறப்புரை ஆற்றி தொடக்கி வைத்தார்.
இதில் கலைவாணி தமிழ்ப்பள்ளி முதல் முறையாக கலைவாணி சுழற்கிண்ணத்தை வாகை சூடியது. சுழற் கிண்ணக் கோப்பையைக் கெடா மாநில தொடக்கப் பள்ளி, பாலர் பள்ளி துணை கல்வி அதிகாரி நாகேந்திரன் சுப்பிரமணியம் வழங்கிச் சிறப்பித்தார். நிறைவுரையில் இது போன்ற போட்டிகள் தொடர வேண்டும் என வாழ்த்தினார்.
கலைவாணி தமிழ்ப்பள்ளி கல்வி கேள்விகளிலும் புறப்பாட நடவடிக்கையிலும் முத்திரை பதித்து புகழாரம் சூட்ட வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். முழுக்க முழுக்க இலவசமாக நடைபெற்ற இப்போட்டிக்கான செலவுகள் யாவும் நன்மனம் கொண்ட தனிநபர்களின் கொடையாலும் ஆதரவாலும் சீரிய முறையில் நடைபெற்றது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *