சென்னையில் தவறவிட்ட தங்கத்தை ஹங்கேரியில் வென்ற பிரக்ஞானந்தா!

top-news
FREE WEBSITE AD

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது. இதன் ஓபன் பிரிவில் 193 அணிகள் பங்கேற்றன. இதில், ஸ்லோவேனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி சமன் செய்தது. இருப்பினும் புள்ளிகள் அடிப்படையில் குகேஷ், பிரக்ஞானந்தா, ஹரி கிருஷ்ணா, விதித் குஜ்ராத்தி, மற்றும் அர்ஜுன் எரிகைசி ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெற்றி பெற்று தங்கம் வென்றது.

இதேபோல் அஜர்பைஜான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது. வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து இந்திய மகளிர் சதுரங்க அணியில் இடம்பெற்றுள்ள கேப்டன் அபிஜித் கன்டே, ஹரிகா துரோணவள்ளி, வைஷாலி ரமேஷ் பாபு, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதனிடையே செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

மாமல்லபுரத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தவறவிட்ட தங்கப் பதக்கத்தை, ஹங்கேரியில் வென்றுவிட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.இரு பிரிவுகளிலும் தங்கம் வெல்வது சுலபமல்ல, தங்கம் வென்றதில் மகிழ்ச்சி என்றும் பிரக்ஞானந்தா தெரிவித்தார்.

ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் விஸ்வநாதன் ஆனந்த் உடன் நிறைய விவாதிப்பேன் என்றும் பிரக்ஞானந்தா கூறினார்.இதற்கிடையே, கோப்பை வழங்கும் நிகழ்வின்போது மெஸ்ஸி ஸ்டைலில் குகேஷ் கோப்பையை ஏந்தி வந்து கொண்டாடிய காணொளி அதிகமாக பகிரப்பட்ட நிலையில் அதற்கு யோசனை கொடுத்ததே பிரக்ஞானந்தா தான் என்று வைஷாலி கூறினார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *