தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க வேண்டும்!
- Muthu Kumar
- 14 Sep, 2024
பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான பெண்கள் வலைப்பந்துப் போட்டியில் புக்கிட் மெர்தாஜம் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி வெற்றி வாகை சூடியது.
நிபோங் தெபால் தமிழ்ப்பள்ளி இரண்டாவது நிலையிலும்,கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி மூன்றாவது நிலையிலும், ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி நான்காவது நிலையிலும் வெற்றி பெற்றன.முதன் முறையாக நடைபெற்ற குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் பிரிவில் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி முதல் நிலையிலும்,திரான்ஸ் கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி இரண்டாம் நிலையிலும், பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளி மூன்றாம் நிலையிலும் மற்றும் நான்காம் நிலையில் மலாக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் வென்றன.
மாநிலத்திலுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளில் 25 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச் சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும்,பிறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு போட்டியை
அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் எடுத்து வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு பினாங்கு மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த பல்வேறு போட்டிகளை நடத்த தாம் எண்ணம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இதன் மூலம் நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தில் விளையாட்டுத் துறையில் சிறந்த வெற்றிகளையும், சாதனைகளையும் படைக்க முடியுமென மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு நடவடிக்கை செயற்குழுத் தலைவருமான அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *