கோலாலம்பூர்- சிட்னி இடையே நடுவானில் விமானக் கதவைத் திறக்க முயன்றவர் கைது!

top-news
FREE WEBSITE AD

அங்காரா, ஏப். 7-

மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற ஜோர்டான் நாட்டின் குடிமகன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளான் என்று ஆஸ்திரேலிய கூட்டரசு போலீஸ்துறை நேற்று தெரிவித்தது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த வேளையில், நாற்பத்தாறு வயதான அந்நபர், விமானத்தின் பின்பகுதியில் அவசரக் கதவைத் திறக்க முயன்றார்.

அந்நபரை அவ்வாறு செய்ய விடாமல் தடுத்த விமானப் பணியாளர்கள் அப்பயணியை மீண்டும் இருக்கையில் அமரச் செய்தனர். சிறிது நேரத்தில் மீண்டும் இருக்கையிலிருந்து எழுந்த அந்நபர். விமானத்தின் மையப் பகுதியில் உள்ள மற்றோர் அவசரக் கதவைத் திறக்க முயன்றான். அப்போது உடனடியாக செயல்பட்ட பணியாளர்கள் அவரை வளைத்துப் பிடிக்க முயன்றனர். அவ்வேளையில், விமானப் பணியாளர் ஒருவரை அந்த ஜோர்டானிய நபர் தாக்கினான் என்று ஆஸ்திரேலியப் போலீஸ்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் சிட்னி விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் அந்நபர் கைது செய்யப்பட்டான்.பர்ராமட்டா நீதிமன்றத்தில் அவன் மீது குற்றம் சுமத்தப்படவுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு பத்தாண்டுகள் வரைக்குமான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

Seorang warga Jordan ditahan selepas cuba membuka pintu kecemasan ketika penerbangan dari Kuala Lumpur ke Sydney. Beliau turut menyerang kru kabin. Polis Australia mengesahkan insiden dan suspek berdepan hukuman penjara hingga 10 tahun jika disabit kesalahan.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *