தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் உடைக்கப்படாது DBKL அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 21-

கோலாலம்பூரின் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் அமைந்திருக்கும் தேவி ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு மாற்றிடமொன்றைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் நேற்று தெரிவித்தது. தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான அந்நிலத்தில் பள்ளிவாசலொன்றை நிர்மாணிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அந்த சிறிய இடத்தில் தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயமும் அமைந்திருப்பதால் அப்பரிந்துரை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று அது குறிப்பிட்டது.பள்ளிவாசலை நிர்மாணிப்பது அரசாங்கத்தின் பரிந்துரை அல்ல. மாறாக, அந்நிலத்தின் சட்டப்பூர்வ உரிமையாளரான தனியார் நிறுவனத்தின் பரிந்துரையே அதுவாகும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்புடைய வகையில் ஆக்ககரமான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் இடிப்புப் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாது.

ஆலயத்தை இடமாற்றம் செய்யும் பணிகள்
முழுமைபெறும் வரையில் அந்த ஆலயம் தொடர்ந்து செயல்பட்டு வரும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் இணக்கத்தைப் பெற்ற பிறகு வெளிப்படையான வகையிலும் நியாயமான வகையிலும் இடமாற்றப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அது உறுதியளித்தது.

ஆலய இடமாற்றப் பணிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். நாட்டின் நல்லிணக்கத்தைப் பராமரித்து வரும்படியும் சமயப் பன்முகத்தன்மையை மதித்து நடக்கும்படியும் அவர்கள் அனைவரையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்றும் அது கேட்டுக் கொண்டது. ஜாக்கேல் மால் கட்டடத் தொகுதிக்கு எதிரே அமைந்துள்ள அந்த ஆலயம் 130ஆண்டுகள் பழைமையானது என்று கூறப்படுகிறது.

இதனிடையே, தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை செலவுத் தொகையைத் தாங்கள் ஏற்றுக் கொள்வதாக நில உரிமையாளர் ஜாக்கேல் டிரேடிங் செண்டிரியான் பெர்ஹாட்டின் சட்ட மற்றும் நிறுவனத் தொடர்புப் பிரிவின் தலைவர் அய்மான் டாசுக்கி வாக்குறுதி அளித்துள்ளார்.ஆலய நிர்வாகக் குழுவினருடன் பத்தாண்டுகளுக்கும் மேலாக நாங்கள் பேச்சு நடத்திவருகிறோம். ஆலயத்தை இடமாற்றம் செய்வதற்கான செலவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

கடந்த 2022ஆம் ஆண்டில் ஜாக்கேல் டிரேடிங் நிறுவனம் அந்நிலத்தைக் கொள்முதல் செய்த நாளிலிருந்து இதுவரை ஆலய நிர்வாகத்தினருக்கும் எங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சமுகமாக நடைபெற்று வந்துள்ளது என்றும் அய்மான் கூறினார்.இதனிடையே, இம்மாதம் 27ஆம் தேதியன்று பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் விழா நடைபெறும் என்றும் கூறினார்.

DBKL dapat lokasi baharu bagi pemindahan Kuil Sri Bhadra Kaliamman di Jalan Masjid India. Pemilik tanah, Jakel Trading, bersedia menanggung kos pemindahan. DBKL memberi jaminan tiada perobohan sehingga perbincangan selesai, sementara pembinaan masjid dijadual bermula 27 Mac.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *