நாட்டில் என்ன நடக்கிறது என அன்வாருக்குத் தெரியாதா?

top-news

மார்ச் 20,

மதங்களுக்கிடையிலானச் சச்சரவுகள் தொடர்ந்து வலுத்து வரும் நிலையில் இஸ்லாத்தை அவமதிப்பவர்களுக்கு எதிராகப் பிரதமர் அன்வார் இதுவரையும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருப்பது வருத்தமளிப்பதாகப் பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Ahmad Fadhli Shaari தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தும் தரப்பினர்களுக்கு எதிராக அன்வார் வாயைத் திறக்காமல் அமைதிக் காப்பதால் ஓர் இஸ்லாமிய நாட்டில் இஸ்லாத்தை அவமதிகும்படியானச் செயல்பாடுகள் அதிகரித்துவிட்டதாகவும் அன்வார் வாயைத் திறக்க வேண்டும் என்றும் Ahmad Fadhli Shaari வலியுறுத்தினார்.

பலதரப்பட்ட மக்களால் வைரலாகிய செய்திகள் பல இருந்து அன்வார் இதுவரையிலும் இஸ்லாத்தை அவமதித்தவர்களுக்கு எதிராக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் அன்வார் இருப்பதாகச் சந்தேகிக்க வைப்பதாகவும் Ahmad Fadhli Shaari தெரிவித்தார். இஸ்லாத்தை அவமதித்தால் நாட்டின் பிரதமர் அமைதியாக இருக்க கூடாது. உடனடியாக எதிர்வினையாற்றும் பிரதமர் தான் வேண்டும் என Ahmad Fadhli Shaari தெரிவித்தார்.

Ketua Penerangan PAS Ahmad Fadhli Shaari mempersoalkan sikap Perdana Menteri Anwar Ibrahim yang didakwa berdiam diri terhadap isu penghinaan Islam. Beliau menggesa Anwar untuk bertindak tegas bagi menangani ketegangan antara agama yang semakin meningkat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *