முஸ்லீம் அல்லாத நபரை அறைந்தவருக்கு விடுதலை!

- Shan Siva
- 19 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 19: ரமலான் மாதத்தில் பொது இடத்தில்
சாப்பிட்டதற்காக முஸ்லிம் அல்லாத ஒருவரை அறைந்ததாகக் கூறப்படும் மூத்த குடிமகன்
ஒருவருக்கு ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று விடுதலை (DNAA) வழங்கியுள்ளது.
துணை அரசு
வழக்கறிஞர் நூர் ஃபாத்திஹா நிஜாமின் வேண்டுகோளின் பேரில், வழக்கை சட்டத்துறை அலுவலகத்திற்குப் பரிந்துரைக்க
உத்தரவிடப்பட்டுள்ளதாகக் நீதிபதி ஏ ஷார்மினி தெரிவித்தார்.
முன்னதாக அப்துல்
ரசாக் இஸ்மாயில், என்ற சம்பந்தப்பட்ட 65, வயது நபர் மீது தானாக முன்வந்து காயப்படுத்தியதாக
குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
மார்ச் 16 ஆம் தேதி பிற்பகல் 3.45 மணியளவில் ஜொகூர் பாருவில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில்
இந்தக் குற்றத்தைச் செய்ததாக ரசாக் மீது குற்றம் சாட்டப்பட்டது.
தன்னிச்சையாக காயப்படுத்திய குற்றத்திற்கு, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 323 இன் கீழ், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அதிகபட்சமாக RM2,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்!
Seorang lelaki berusia 65 tahun yang didakwa menampar individu bukan Islam kerana makan di tempat awam pada bulan Ramadan dibebaskan tanpa dilepaskan (DNAA) oleh Mahkamah Majistret Johor Bahru. Kes ini dirujuk kepada Pejabat Peguam Negara untuk tindakan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *