பாரீஸ் வீராங்கனை ரெபேக்காவின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது!
- Muthu Kumar
- 16 Sep, 2024
உகாண்டா நாட்டை சேர்ந்த 33 வயதான ஒலிம்பிக்ஸ் மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ரெபேக்கா செப்டேகி மீது அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடைசியாக உகாண்டா சார்பில் பாரீஸ் ஒலிம்பிக்சில் கலந்துகொண்டு மாரத்தான் பிரிவில் 44வது இடத்தைப் பிடித்து நாடு திரும்பிய ரெபேக்கா கென்யா நாட்டில் மேற்கு Trans Nzoia மாகாணத்தில் அவருக்குசொந்தமான வீட்டில் ஓய்வில் இருந்தார்.
வீட்டில் வைத்து ரெபேக்காவுக்கும் அவரது முன்னாள் காதலன் டேனியலுக்கும் இடையில் இருந்த நிலத்தகராறு காரணமாக வாக்குவாதம் எழுந்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ரெபேக்கா மீது பெட்ரோல் ஊற்றி தீவை வைத்துள்ளார் டேனியல். இந்த தீ விபத்து சம்பவத்தில் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெபேக்கா உடல் உறுப்புக்கள் செயலிழப்பு காரணமாக கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில் வீராங்கனை ரெபேக்காவின் உடல் நேற்றைய தினம் கென்யாவில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. கென்ய நாட்டின் எல்லையில் உள்ள நகரத்தில் நடந்த இந்த இறுதி ஊர்வலத்தில் உகாண்டாவை சேர்ந்த ஆயிரக்கணக்காக மக்கள் ரெபேக்காவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.இதற்கிடையே ரேபேக்காவின் காதலிடம் போலீஸ் விசாரித்து வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *