எலி விஷம் சாப்பிட்ட சிறுவன் மரணம் தொடர்பில் விவசாயி கைது!

top-news
FREE WEBSITE AD


கூலிம், ஜூலை 11: இரண்டு சகோதரர்கள் எலி விஷம் கலந்த தின்பண்டங்களை சாப்பிட்டு, அவர்களில் ஒருவர் நேற்று உயிரிழந்த நிலையில், விவசாயி ஒருவரை 6 நாட்கள் காவலில் வைக்க போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

இன்று காலை 8 மணியளவில்  நீதிமன்றத்தில் அந்த விவசாயி ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி மிர்சா மொஹமட் விளக்கமறியலில் வைக்கப்பட்ட விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டார்.

30 வயதுடைய அந்த  விவசாயி, கம்போங் பாடாங் உபியைச் சேர்ந்த சிறுவர்களின் அண்டை வீட்டுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. குரங்குகளின் அட்டுழியத்தால்  விஷம் கலந்த தின்பண்டத்தை சம்பந்தப்பட்ட அந்த விவசாயி குரங்குகளுக்காக வைத்துள்ளார். சிறுவர்கள் அதைச் சாப்பிட்டு பாதிக்கப்பட்டனர். இதில் ஒரு சிறுவன் பரிதாபமாக மாண்டான். இந்நிலையில்,  சம்பந்தப்பட்ட அந்த விவசாயியை  நேற்று மதியம் செர்டாங்கில் உள்ள லுபோ பண்டாரில் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில்ல் 1.2 மீட்டர் உயரத்தில் பாதுகாப்பாகக் கட்டப்பட்டிருந்ததாகவும்,  எலி விஷம் கலந்த தின்பண்டங்களை ஒரு குழந்தை அடைவது "சாத்தியமற்றது" என்று அம் என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட விவசாயி கூறினார்.

தின்பண்டங்களை குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பு யாராவது எடுத்திருக்க வேண்டும் அல்லது தரையில் விழுந்திருக்க வேண்டும் என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், தின்பண்டங்களை சாலையின் அருகே உள்ள வேலியில் கட்டவில்லை, மாறாக காடுகளுக்கு அருகில் உள்ள குரங்கு பாதை பகுதிக்கு அருகில் அவை இருந்ததாக அவரின் சகோதரர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *