தேசிய இளம் ஆய்வாளர்கள் அறிவியல் விழா- பூச்சோங் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி வெற்றி!
- Muthu Kumar
- 03 Oct, 2024
கோலாலம்பூர், அக். 3-
கோலாலம்பூர் இம்பி கொன்வென்சன் மண்டபத்தில் கடந்த 28, 29ஆம் தேதிகளில் தேசிய இளம் ஆய்வாளர்கள் அறிவியல் விழா நடைபெற்றது.நாடு தழுவிய அளவில் 369 பள்ளிகள் கலந்துகொண்டன. அதில் 70 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. பூச்சோங் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 5 பேர் இந்த அறிவியல் விழாவில் கலந்துகொண்டு முதல் நிலையில் வெற்றி பெற்றனர் என்று அப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி அனுராதா தெரிவித்தார்.
அந்த வகையில் மாணவர்களுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துக்கொண்ட அவர் இந்நிகழ்ச்சியின் பொறுப்பு ஆசிரியர் திருமதி டத்தின் தேவகி, ஆசிரியர் புதல்வி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இந்த மாணவர்களுக்கு தேவையான தகவல்களைச் சேகரித்து நல்ல முறையில் பயிற்சிகளை வழங்கியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.இளம் ஆய்வாளர்கள் அறிவியல் விழா இந்த மாணவர்கள் முதல் முயற்சியில் பெரும் வெற்றியடைந்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் ரொக்கம் 2500 வெள்ளியும் பதக்கம், சான்றிதழும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பபட்டது.
மாணவர்களின் முயற்சிக்கு பெற்றோர்கள் பெரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.அவர்களுக்கு இந்த வேளையில் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக பள்ளியின் தலைமையாசிரியர் அனுராதா தெரிவித்தார். மாணவர்கள் இன்னும் பல போட்டிகளில் கலந்து கொள்வதற்கு எந்த நேரத்திலும் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பள்ளி வாரியமும் வாழ்த்து தெரிவித்தன
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *