அடுத்த IGP ஆக டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை வருவார் என எதிர்பார்ப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 18:

தேசிய காவல்துறையின் தற்போதைய தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைனுக்குப் பிறகு, தேசிய காவல்துறை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை, நாட்டின் அடுத்த IGP ஆக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகள் ஐஜிபியாக பணியாற்றிய ரஸாருதீன், ஜூன் மாதம் ஓய்வு பெற உள்ளார், இருப்பினும் அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா என்பது நிச்சயமற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  62 வயதான ரஸாருதீனுக்குப் பதிலாக அடுத்த  இடத்தில்  59 வயதான அயோப் முன்னணியில் உள்ளார். இருப்பினும், போலீஸ் படை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நியமனத்திற்கு மலேசிய மன்னர் சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதல் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Timbalan Ketua Polis Negara, Ayob Khan Mydin Pitchay dijangka menggantikan Tan Sri Razarudin Husain sebagai Ketua Polis Negara (IGP) selepas persaraan beliau pada Jun ini. Namun, pelantikan ini masih memerlukan perkenan Yang di-Pertuan Agong berdasarkan cadangan Suruhanjaya Pasukan Polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *