வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்போங் செங்காங் பகுதியை டத்தோ முகமட் ஜஃப்னி பார்வையிட்டார்!

- Muthu Kumar
- 23 Mar, 2025
கூலாய், மார்ச் 23-
ஜொகூர் கூலாய் கம்போங் செங்காங்கில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட சேதத்தை ஜொகூர் மாநில வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி ஆணைக்குழுத் தலைவர் டத்தோ முகமட் ஜஃப்னி முகமட் ஷுகோர் நேரில் பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு முன்கூட்டியே பிபிஎஸ் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.அனைவரும் விழிப்புடன் இருந்து, தங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியளிக்கும் கூலாய் மாவட்ட அலுவலகம். கூலாய் நகராட்சி சபை, சமூக நலத் துறை, மாவட்ட சுகாதார அலுவலகம் மற்றும் அனைத்து பாதுகாப்புப் படைகள், தலைவர், தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி தலைமையிலான மாநில அரசு மக்கள் நலனில் உறுதியாக இருப்பதை உறுதி செய்கிறோம். இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மன உறுதி கிடைக்க வேண்டும் எனக் கூறினார்.இதனிடையே, கூலாய், மாநில அரசின் எதிர்கால வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கருத்தை டத்தோ முகமட் ஜஃப்னி முகமட் ஷுகோர் தெரிவித்தார்.
மாநில அரசின் சிறப்பு குழு, ஜொகூர் மாநிலத்தில் மீண்டும் ஏற்படும் வெள்ளங்களை தடுக்கும் வகையில் தீர்வு கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான வெள்ள பாதிப்பு குறைந்த பகுதிகளில் முன்னேற்ற பணிகள் மேற்கொள்ளப்படும். வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள தடுப்பு திட்டங்களை விரைவாக செயல்படுத்துமாறு உள்ளூராட்சி துறை இயக்குநருக்குத் தாம் பணிந்துரை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
இதனுடன், ஜொகூர் மாநிலத்தின் 16
உள்ளூராட்சிகளுக்கு, குறிப்பாக கிரேட்டர் ஜொகூர் பாருவில் உள்ள பகுதிகளுக்கு, மழைக்கால மண்சரிவு பாதிப்பு மற்றும் நீர்வீழ்ச்சி பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் பரிசீலனை செய்யும் பணிகள் முன்னெடுக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
இது குறிப்பாக பருவமழையின் தாக்கத்தால் ஏற்பட்ட நீர் வடிகால் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மழைக்கால கால்வாய் பராமரிப்பு, நீர்தேக்கக் குளங்கள் தேவையா என ஆய்வு மற்றும் வடிகால் அமைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்குமிடங்களுக்கு நகர்த்துவதற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ளவும் அதிகாரிகள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதை குறிப்பிட்டார்.
Exco Perumahan dan Kerajaan Tempatan Johor, Datuk Mohamad Jafni meninjau kesan banjir di Kampung Sengkang, Kulai. Beliau menekankan keselamatan penduduk, mengarahkan langkah pencegahan serta mempercepatkan projek tebatan banjir di kawasan terjejas bagi menghadapi musim tengkujuh akan datang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *