பிடிபட்டது கரடி; கிராம மக்கள் மகிழ்ச்சி!
- Shan Siva
- 13 Jul, 2024
ஜெலி, ஜூலை 13: கிளந்தான் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறை ( நேற்று கம்போங் சுங்கை சத்தானில் ஒரு பெண் கரடியைப் பிடித்தது.
கடந்த செவ்வாய்கிழமை கிராமத்தின் தோட்டங்களில் அந்த Sun Bear கரடி சுற்றித் திரிவதாக ஜெலி வனவிலங்கு துறைக்குப் புகார் வந்ததாக அதன் இயக்குனர் முகமட் ஹபிட் ரோஹானி தெரிவித்தார்.
பின்னர் அந்த இடத்தில் கரடிப் பொறி பிரிவை அமைத்ததாக அவர் கூறினார்.
இந்த கரடி பிடிபட்ட பிறகு, அது கிராமவாசிகளுக்கு ஓரளவு நிம்மதியை அளித்தது. மேலும் பயிர் மற்றும் பிற உடமைகள் சேதத்தில் இருந்து தப்பியதாக கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த கரடியை மிகவும் பொருத்தமான மற்றும் பாதுகாப்பான வாழ்விடத்திற்கு இடமாற்றம் செய்து, விடுவிப்பதற்கான நடவடிக்கை ஜெலி பெர்ஹிலித்தான் மேற்கொள்ளும் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
வனவிலங்குகளை எதிர்கொண்டால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், தங்களுக்கு பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தங்கள் சொந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *