சாலைகளில் எச்சரிக்கை அவசியம்! – பிரதமர்

- Shan Siva
- 28 Mar, 2025
ஷா ஆலம், மார்ச் 28: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஹரி ராயா விடுமுறைக்குத் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புபவர்கள் சாலைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
விபத்துக்களின்
எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
விபத்துக்கள்
கணிசமாக அதிகரித்துள்ளதால், சாலையில் கூடுதல்
விழிப்புடன் இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது அனைவருக்கும் ஒரு நினைவூட்டல். குடும்பப் பிணைப்புகளை வலுப்படுத்த ஐடில்ஃபித்ரியைக் கொண்டாட விரும்புகிறோம். ஆனால் ஒரு விபத்து குடும்பங்கள் மற்றும் உறவினர்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் என்று இன்று ஷா ஆலம் பிரிவு 16 இல் உள்ள மஸ்ஜித் ஜாமெக் ராஜா துன் உடாவில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றிய பிறகு அன்வார் இவ்வாறு கூறினார்!
Perdana Menteri Anwar Ibrahim menasihatkan rakyat agar berhati-hati di jalan raya semasa pulang ke kampung untuk Hari Raya, berikutan peningkatan kemalangan. Beliau mengingatkan bahawa keselamatan penting bagi mengelakkan tragedi yang boleh menjejaskan kebahagiaan keluarga semasa perayaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *