ஜொகூர் வெள்ளத்தில் 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்!

top-news

மார்ச் 21,

ஜொகூரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழையின் காரணமாக ஜொகூரில் 3,018 குடும்பங்கள் வீடுகளை இழந்திருக்கும் நிலையில் இதுவரையில் 10,763 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜொகூர் மாநில இயற்கை பேரிடர் ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Dr Azmi Rohani தெரிவித்தார்.

இதுவரை ஜொகூரில் மொத்தம் 98 தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் ஜொகூர் பாருவில் 4,291 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குளுவாங்கில் 2,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கோத்தா திங்கி, பொன்தியான், கூலாய் பகுதிகளில் மொத்தம் 1,152 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜொகூர் மாநில இயற்கை பேரிடர் ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Dr Azmi Rohani தெரிவித்தார்.

Seramai 10,763 mangsa daripada 3,018 keluarga terjejas akibat banjir di Johor dan ditempatkan di 98 pusat pemindahan sementara. Menurut Tan Sri Dr Azmi Rohani, daerah paling teruk terjejas ialah Johor Bahru (4,291 mangsa) dan Kluang (2,163 mangsa) 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *