ஜொகூரில் மோசமடையும் வெள்ள நிலைமை! வீடுகளை இழந்த 72 குடும்பங்கள்!

top-news

மார்ச் 28,

கனமழையின் காரணமாக ஜொகூரில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நிலமை மோசமடைந்து வருவதாகவும் பத்து பஹாட் மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநில வெள்ளத் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று காலை பத்து பஹாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் 72 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளை இழந்துள்ள 72 குடும்பங்களைச் சேர்ந்த 270 பேரில் 236 பேர் Seri Gading இடைநிலைப்பள்ளியிலும் 34 பேர் Sri Comel இடைநிலைப்பள்ளியிலும் தங்க வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அதிகமான வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கபடவிருப்பதாக ஜொகூர் மாநில வெள்ளத் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் Tan Sri Dr Azmi Rohani தெரிவித்தார்.

Banjir semakin buruk di Johor, dengan daerah Batu Pahat paling terjejas. Seramai 72 keluarga kehilangan tempat tinggal akibat banjir. Sebanyak 270 mangsa dipindahkan ke pusat pemindahan di dua sekolah sementara lebih banyak pusat bantuan akan dibuka jika perlu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *