வெள்ளத்தால் 20 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளது!

- Sangeetha K Loganathan
- 20 Mar, 2025
மார்ச் 20,
தொடர்மழை எச்சரிக்கையைத் தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA விடுத்திருந்த நிலையில் இன்று ஜொகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 20 ஆரம்பப்பள்ளிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநில வெள்ளத் தடுப்பு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. 110 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜொகூரின் 5 மாவட்டங்களில் உள்ள 20 பள்ளிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 471 குடும்பங்களைச் சேர்ந்த 1691 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜொகூர் பாருவில் 674 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கோத்தா திங்கியில் 431 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொன்தியானின் 297 பேர் பாதிக்கப்பட்ட்டுள்ளதாகவும் கூலாயில் 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Johor dilanda banjir akibat hujan berterusan, menjejaskan 20 sekolah rendah dan lebih 110 guru. Seramai 1,691 mangsa dari 471 keluarga dipindahkan, dengan daerah Johor Bahru, Kota Tinggi, Pontian dan Kulai paling terjejas. MetMalaysia telah mengeluarkan amaran hujan berterusan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *