ஆற்றில் மூழ்கிய மகனை மீட்கும் முயற்சியில் தந்தை பலி!

- Sangeetha K Loganathan
- 27 Mar, 2025
மார்ச் 27,
கிள்ளானில் உள்ள Bukit Jati ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது தவறி விழுந்த 11 வயது மகனை மீட்கும் முயற்சியில் 40 வயது தந்தை நீரில் மூழ்கி இறந்ததாகச் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் AHMAD MUKHLIS தெரிவித்தார்.
நேற்றிரவு 7.42 மணிக்குக் கிள்ளானில் உள்ள BUKIT JATI ஆற்றில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக AHMAD MUKHLIS தெரிவித்தார். 11 வயது MUHAMAD FARIS எனும் சிறுவனைக் காப்பாற்றியதும் 40 வயது SHARIF YUSOF எனும் தந்தை ஆற்றில் மூழ்கியதாகவும் சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர். சுமார் 2 மணிநேரத் தேடுதலுக்குப் பின்னர் இரவு 9 மணிக்கு நீரில் மூழ்கிய 40 வயது தந்தை சடலமாக மீட்கப்பட்டதாகவும் 11 வயது சிறுவன் காப்பற்றப்பட்டதாகவும் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் AHMAD MUKHLIS தெரிவித்தார்.
Seorang bapa berusia 40 tahun lemas ketika cuba menyelamatkan anaknya yang terjatuh ke dalam Sungai Bukit Jati, Klang. Anak lelaki berusia 11 tahun berjaya diselamatkan manakala mayat bapanya ditemui selepas dua jam pencarian oleh pasukan penyelamat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *