வெளிநாட்டு அரிசிகளைக் கடத்திய இருவர் கைது!

- Sangeetha K Loganathan
- 26 Mar, 2025
மார்ச் 26,
தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குக் கடத்தப்பட்டதாக நம்பப்படும் 1273 கிலோ அரிசு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அதனை வாகனத்தில் கடத்திய 2 மலேசிய ஆடவர்களையும் தேசிய எல்லை பாதுகாப்பு கடத்தல் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ர்நதாவ் பஞ்சாங்கிலுள்ள Kg Baroh Pial சாலையில் சோதனையின் போது சந்தேகத்திற்குரிய வாகனத்தைத் துரத்தி சோதனையிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட வாகனத்திலிருந்து 950 கிலோ பச்சரிசியும், 323 கிலோ மாம்பழம் முத்திரைகள் கொண்ட அரிசி மூட்டைகளும் கண்டெடுக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட அரிசி வகைகள் தாய்லாந்து சியாம் பகுதிகளில் விளையப கூடியவை என்றும் அதன் மதிப்பு RM 37,942.00 என்றும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 34 வயது 35 வயது மலேசிய ஆடவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dua lelaki Malaysia ditahan kerana menyeludup 1,273 kg beras dari Thailand ke Malaysia. Dalam operasi di Kg Baroh Pial, pihak berkuasa merampas beras bernilai RM37,942. Kedua-dua suspek berusia 34 dan 35 tahun sedang disiasat lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *