130 ஆண்டுகள் பழமையானக் கோயிலா? ஆதாரம் எங்கே? - பெர்சாத்து கேள்வி!

top-news

மார்ச் 30

தலைநகர் Dewi Sri Bathrakaliamman ஆலயம் 130 ஆண்டுகள் பழமையானக் கோயில் என தெரிவிப்பதற்கு என்ன ஆதாரம் என பெர்சத்து கட்சியின் Hulu Langat மாவட்டத் தலைவர் Mohamad Shafiq bin Abdul Halim கேள்வி எழுப்பியுள்ளார். பழமையானக் கோயில் என்பதால் DBKL நிலத்தின் உரிமையாளருடன் பேச்சு வார்த்தை நடத்தி புதிய நிலம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அது 130 ஆண்டுகள் பழமையானது என்பதை DBKL வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

வழிபாட்டுத் தலங்களுக்கானச் சட்டம் 1965 ஆம் ஆண்டு இயற்றப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு முந்தைய காலங்களிருந்த கோயில்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருக் வேண்டும் என்பதை மேற்கோள்காட்டி பதிவுச் செய்யப்படாத கோயிலுக்காக DBKL சமரசம் செய்து வைப்பதும் நிலத்தை வழங்குவதும் முறையானதில்லை என்றும் அப்படி அந்த கோயில் 130 ஆண்டுகள் பழமையானக் கோயில் என்றால் அதற்கான ஆதாரத்தைக் கோயில் தரப்பினர் வெளியிட வேண்டும் என பெர்சத்து கட்சியின் Hulu Langat மாவட்டத் தலைவர் Mohamad Shafiq bin Abdul Halim வலியுறுத்தினார்.

Ketua Bahagian Hulu Langat Parti Bersatu Mohamad Shafiq bin Abdul Halim mempersoalkan bukti yang menyokong dakwaan bahawa Kuil Dewi Sri Bathrakaliamman berusia 130 tahun. Beliau mendesak DBKL dan pihak kuil mengemukakan bukti sebelum tanah diberikan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *