Cryptocurrency மோசடியில் RM1.9 மில்லியனை இழந்த தோட்ட மேலாளர்!

- Sangeetha K Loganathan
- 21 Mar, 2025
மார்ச் 21,
அதிக லாபம் பெற ஆசைப்பட்டு அங்கீகரிக்கப்படாத cryptocurrency முதலீட்டில் தனது வாழ்நாள் சேமிப்பான RM1.9 மில்லியனை 69 வயதானத் தோட்ட மேலாளர் இழந்துள்ளதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார். WHATSAPP மூலமாக அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து Cryptocurrency குறித்தான முதலீடு விளம்பரத்தைப் பெற்றதாகவும் 20 முதல் 40 விழுக்காடு லாபம் பெறலாம் என குறிப்பிட்டிருந்ததாகவும் பாதிக்கப்பட்ட 69 வயது தோட்ட மேலாளர் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 2024 இல் பல வங்கிக் கணக்குகளுக்கு RM1.9 மில்லியன் பணத்தைப் பரிவர்த்தனை செய்த அவர், 2.2 மில்லியன் அமெரிக்க டாலர் லாபம் பெற்றுள்ளதாகவும், பணத்தை மீண்டும் பெற முயற்சிக்கும் போது சம்மந்தப்பட்ட முதலீடுக்கான வலைத்தலம் தடை செய்யப்பட்டிருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார்.
Seorang pengurus ladang berusia 69 tahun kerugian RM1.9 juta selepas melabur dalam skim cryptocurrency tidak sah yang menjanjikan pulangan 20-40%. Ketua Polis Johor, Datuk M Kumar berkata mangsa hanya sedar ditipu apabila laman web pelaburan itu disekat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *