கேபிள் திருட்டின் போது மின்சாரம் தாக்கியதில் திருடர் பலி! மற்றொருவர் படுகாயத்துடன் தப்பினார்!

- Sangeetha K Loganathan
- 25 Mar, 2025
மார்ச் 25,
சாலையோரம் போடப்பட்டிருந்த மின்சாரக்கேபிள்களைத் திருடும் முயற்சியில் ஈடுபட்ட இருவர் மீது மின்சாரம் தாக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியது தொடர்பாகக் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுப்பட்ட ஆடவர் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மற்றொருவர் மயங்கி விழுந்து அதன்பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பியதாகவும் ஈப்போ மாவட்டக் காவல் ஆணையர் Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்தார்.
இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் ஈப்போவில் உள்ள Taman Silibin Ria சாலையில் நிகழ்ந்ததாக Abang Zainal Abidin தெரிவித்தார். கேபிள் திருட்டின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆடவர் மீது முன்னமே 10 குற்றங்களுக்காகத் தேடப்படும் குற்றவாளி அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் மின்சாரம் தாக்கி மயக்க நிலையில் தப்பிய ஆடவரின் மோட்டார் சைக்கிள் பதிவு எண்களைக் கொண்டு அவரைத் தேடி வருவதாகவும் ஈப்போ மாவட்டக் காவல் ஆணையர் Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்தார்.
Seorang lelaki maut akibat renjatan elektrik ketika cuba mencuri kabel di Ipoh, manakala rakannya melarikan diri dengan kecederaan. Mangsa dikenal pasti sebagai penjenayah yang dikehendaki dengan 10 rekod jenayah. Polis sedang mengesan suspek kedua.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *