DBKL அதிகாரிகளால் தக்கப்பட்ட பலூன் வியாபாரி! DBKL விளக்கம்!

top-news

மார்ச் 29,

தலைநகரில் சாலையோரமாகப் பலூன் விற்கும் ஆடவரைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழக அதிகாரிகள் தாக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவி பொதுமக்களிடையே கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. இது தொடர்பாக DBKL விளக்க அறிக்கையை வெளியிட்டு கண்டனங்களுக்குப் பதிலளித்துள்ளது. 

இச்சம்பவம் தலைநகரிலுள்ள Jalan Tunju Abdul Rahman சாலையில் இரவு 11.50 மணிக்கு நிகழ்ந்ததாகவும் உரிமம் இல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையிலானச் சாலையோரக் கடைகளை DBKL அதிகாரிகள் அப்புறப்படுத்தும் போது பலூன் வியாபாரியை அப்பகுதியிலிருந்து வெளியேறும்படி அதிகாரி தெரிவித்தும் சம்மந்தப்பட்ட வியாபாரி அதிகாரியைத் தாக்கியதாகவும் DBKL அதிகாரி தாக்குதலுக்குள்ளானதும் DBKL பாதுகாப்பு அதிகாரிகள் தாக்குதல் நடத்திய வியாபாரியைக் கட்டுபடுத்த முயற்சித்தாகவும் DBKL அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உரிமம் இல்லாமல் வணிகம் செய்யும் வணிகர்கள் மீது DBKL நடவடிக்கை எடுக்கும் என்றும் சாலையோர வியாபாரிகளுக்காக வழங்கப்படும் வணிக உரிமங்களின் கட்டணமும் அதன் வழிமுறைகளும் இலகுவாக்கப்பட்ட பின்னரே DBKL இம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DBKL menjelaskan bahawa penahanan seorang peniaga belon tanpa lesen di Jalan Tun Abdul Rahman berlaku selepas dia dikatakan menyerang pegawai penguat kuasa. DBKL menegaskan tindakan ini diambil bagi memastikan laluan tidak terganggu serta menjamin ketenteraman awam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *