தலைநகரில் 3 தங்கும்விடுதிகளை மூடிய DBKL!

- Sangeetha K Loganathan
- 23 Mar, 2025
மார்ச் 23,
தலைநகரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 3 தங்கும் விடுதிகளை மூடியதுடன் 1 தங்கும் விடுதியின் மீது சட்டநடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு கோலாலம்பூரில் உள்ள 4 தங்கும் விடுதிகளையும் ஒரே நேரத்தில் சோதனையிட்டதாகவும் சம்மந்தப்பட்ட தங்கும் விடுதிகள் வெளிநாட்டினர்களால் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ள நிலையில் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட 4 தங்கும் விடுதிகளும் உள்ளூர் நபரின் ஆவணத்தில் உரிமம் பெற்று வெளிநாட்டினரால் நடத்தப்பட்டு வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட 3 தங்கும் விடுதிகளும் உடனடியாக மூடப்பட்டதுடன் மேலதிகமாக உரிமையாளர் இல்லாமல் செயல்பட்டு வந்த மற்றொரு தங்கும் விடுதிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்தது.
DBKL menutup tiga premis hotel yang beroperasi secara haram di ibu negara dan mengambil tindakan undang-undang terhadap satu lagi premis. Pemeriksaan mendapati premis hotel ini dikendalikan warga asing dengan lesen atas nama penduduk tempatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *