65 லட்சம் மதிப்பிலானப் போதைப்பொருளுடன் 2 இளைஞர்கள் கைது!

- Sangeetha K Loganathan
- 24 Mar, 2025
மார்ச் 24,
போதைப்பொருள் தொடர்பானக் குற்றங்களில் ஈடுப்பட்ட 20 வயது 27 வயது இளைஞர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாகப் பினாங்கு காவல்துறை தலைவர் Datuk Hamzah Ahmad தெரிவித்தார். கடந்த 2 நாள்களாகச் சந்தேகநபர்கள் இருவரையும் பின் தொடர்ந்து நேற்று அவர்களைப் போதைப்பொருளுடன் கைது செய்ததாக Datuk Hamzah Ahmad தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து 1,938 பாக்கேட்டுகளுடன் 38,800 கிராம் எடையிலான MDMA வகை போதைப்பொருள், 946 கிராம் எடையிலான syabu வகை போதைப்பொருள் 6.800 கிராம் எடையிலான heroin, 50.4 கிராம் எடையிலான ketamine என மொத்தம் 65 லட்சம் ரிங்கிட் மதிப்பிலானப் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகப் பினாங்கு காவல்துறை தலைவர் Datuk Hamzah Ahmad தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் லாரி ஓட்டுநராகவும் அவரின் உதவியாளராகவும் இருந்து போதைப்பொருள்களைக் கடத்தி வந்ததாகவும் கைது செய்யப்பட்ட இருவரையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருவதாகவும் பினாங்கு காவல்துறை தலைவர் Datuk Hamzah Ahmad தெரிவித்தார்.
Dua lelaki berusia 20 dan 27 tahun ditahan di Pulau Pinang bersama dadah bernilai RM6.5 juta. Polis merampas MDMA, syabu, heroin dan ketamin. Suspek seorang pemandu lori dan pembantunya dipercayai mengedar dadah dan kini dalam tahanan untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *