டயர் மாற்றும் போது கார் மோதியதில் இருவர் பலி!

top-news

மார்ச் 23,

பழுதான லாரியின் டயரை மாற்றும் போது பின்னிருந்து வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நேற்று பிற்பகல் 2 மணியளவில் Pan Borneo நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டதாகவும் உயிரிழந்தவர்கள் 26 வயது 62 வயதுடைய லாரி ஓட்டுநர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக Papar, மாவட்டக் காவல் ஆணையர் Kamaruddin Ambo Sakka தெரிவித்தார்.

62 வாயது முதியவரின் லாரி டயர் பழுதடைந்ததால் அவருக்கு உதவி செய்த 26 வயது லாரி ஓட்டுநர் தனது லாரியை சாலையோரம் நிறுத்தி லாரியின் டயரை மாற்றும் போது பின்னிருந்து வந்த Proton Saga கார் இருவரையும் மோதி விபத்தை ஏற்படித்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்துக்குக் காரணமான 23 வயது Proton Saga வாகனமோட்டியும் அவருடன் இருந்த மற்றொருவரும் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாக Papar, மாவட்டக் காவல் ஆணையர் Kamaruddin Ambo Sakka தெரிவித்தார்.

Dua pemandu lori maut selepas dirempuh Proton Saga ketika menukar tayar lori rosak di Lebuhraya Pan Borneo. Seorang pemandu berusia 62 tahun dibantu pemandu lain berusia 26 tahun. Pemandu kereta dan penumpangnya mengalami kecederaan ringan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *