போக்குவரத்துக் குற்றங்களை வரும்முன் தடுக்க நடவடிக்கை!

- Muthu Kumar
- 27 Mar, 2025
(கோகி கருணாநிதி)
ஜொகூர், மார்ச் 27-
ஜோகூர் மாநில போலீஸ் தலைமையகம் போக்குவரத்து குற்றங்களை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக 'ஓப்ஸ் சம்ப்சேங் ஜாலானான் பிரச்சினை பெரியதாக வருவதற்கு முன் தடுப்பது நல்லது என்ற சிறப்பு நடவடிக்கையை இரண்டு வாரங்களாக நடத்தி வந்ததாக ஜொகூர் காவல்துறை தலைவர் டத்தோ எம்.குமார் கூறினார்.
மார்ச் 10 முதல் மார்ச் 24 வரை நடைபெற்ற இந்த நடவடிக்கையில், ஜொகூர் போலீசார் 28 மலேசியர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 14 முதல் 36 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கின்றனர் என்றார்.
இந்த நடவடிக்கையின் கீழ், கைது செய்யப்பட்டவர்கள் மீது 1987ஆம் ஆண்டின் போக்குவரத்து சட்டம் 420 பிரிவின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் வெ.15,000 வரை அபராதமும், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 5 ஆண்டுகள் வரை ஓட்டுநர் உரிமத்தை இழப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. அதேசமயம், 291 மோட்டார் சைக்கிள்கள் 1987 ஆம் ஆண்டின் போக்குவரத்து சட்டம் 64(1) பிரிவின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 2,768 போக்குவரத்து முறைகேடுகளுக்கு எதிராக சம்மன் பிறப்பிக்கப்பட்டது. இதில், உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் செலுத்தியதற்காக 1,516 சம்மன்கள் வழங்கப்பட்டன. பதிவுசெய்யப்படாத எண்ணை கொண்ட வாகனங்களுக்கு 643 சம்மன் மற்றும், விதிமுறைகளை மீறிய சப்டி மியூஃசர் (மென்பானி) அமைப்புகளுக்காக 317 சம்மன்கள் வழங்கப்பட்டன என்பதை குறிப்பிட்டார்.
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும். சாலை விதிகளை கடைப்பிடிக்க தூண்டவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜொகூர் போலீஸ் எந்த விதத்திலும் சட்டத்தை மீறுபவர்களுக்கு தளர்வு கொடுக்காது என்று எச்சரித்தார்.
Polis Johor melaksanakan ‘Ops Samseng Jalanan’ dari 10 hingga 24 Mac, menangkap 28 individu berusia 14-36 tahun dan menyita 291 motosikal. Sebanyak 2,768 saman dikeluarkan, termasuk 1,516 bagi memandu tanpa lesen. Polis menegaskan tindakan tegas akan diteruskan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *