மடானி பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழாவின்போது அதிகளவில் போலீஸ் குவிப்பு!

- Muthu Kumar
- 28 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 28 -
ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவுக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை நடந்த மடானி பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா நடந்த பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.அப்பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படவிருக்கும் பகுதியில் அருள்மிகு தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் வீற்றிருக்கிறது.
தற்போது இவ்வாலயம் இருக்கும் இடத்திலிருந்து வெறும் 50 மீட்டர் தூரத்தில் இடம் மாற்றம் செய்ய இணக்கம் காணப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு நேற்று அப்பள்ளிவாசலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.ஜேக்கெல் சதுக்கம் அப்பகுதியில் உள்ள சாலை உட்பட பல பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
அடிக்கல் நாட்டு விழா நடந்த இடத்தில் போலீசார் வரிசையாக நின்றிருந்த வேளையில், மோப்ப நாய்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. பாதுகாப்பு
கடுமையாக்கப்பட்டிருந்த வேளையில், அப்பகுதியில் நிலைமை அமைதியாக காணப்பட்டது.
எனினும், சாலைத் தடுப்புகள் போடப்பட்டிருக்கவில்லை. ஜாலான் முன்சி அப்துல்லா வழியாக பொதுமக்கள் சுதந்திரமாக வந்து போக அனுமதிக்கப்பட்டனர்.மடானி பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழாவில் தாம் நிச்சயம் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டப் போவதாக நான்கு நாட்களுக்கு முன்னர் கூறியிருந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அதன்படி நேற்றைய விழாவில் கலந்து கொண்டார்.
Majlis perletakan batu asas Masjid Madani di Jalan Masjid India berlangsung dengan kawalan polis. Masjid dibina 50 meter dari Kuil Sri Bhadra Kaliamman selepas persetujuan pemindahan. Perdana Menteri Anwar Ibrahim hadir merasmikan majlis tersebut tanpa sekatan jalan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *