மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 30 -

நோன்புப் பெருநாளை குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளதால், நாட்டின் பல நெடுஞ்சாலைகளிலும் முக்கிய சாலைகளிலும் நேற்று சனிக்கிழமை காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது.

அதிகளவில் வாகனங்கள் காணப்பட்டதால், பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து சென்றன.சுங்கை புவாயாவிலிருந்து புக்கிட் தாகார், லெம்பா பெரிங்கினிலிருந்து தஞ்சோங் மாலிம், சிலிம் ரீவரிலிருந்து பீடோர், தாப்பாவிலிருந்து கோப்பெங், ஜாவியிலிருந்து புக்கிட் தம்புன், ஜூருவிலிருந்து பிறை மற்றும் பெர்மாத்தாங்கிலிருந்து பெர்தாம் வழியாக வடக்கு-தெற்கு நெடுஞ்சாலைக்கு (பிளாஸ்) செல்லும் சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து சென்றன.

தெற்கு நோக்கிய வடக்கு-தெற்கு நெடுஞ்சாலைக்குச் செல்லும் பல சாலைகளிலும் இதேநிலைமை காணப்பட்டதாக, மலேசிய நெடுஞ்சாலை குத்தகை நிறுவனப் பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.பிளாஸ் நெடுஞ்சாலையைத் தவிர்த்து கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையிலும் கிழக்குக் கரை நெடுஞ்சாலையிலும் வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

Orang ramai mula pulang ke kampung untuk menyambut Aidilfitri, menyebabkan kesesakan di lebuh raya utama sejak pagi Sabtu. Aliran trafik perlahan di Lebuhraya PLUS, Lebuhraya Pantai Timur dan Lebuhraya Kuala Lumpur-Karak. Kesesakan ketara berlaku di beberapa laluan termasuk Sungai Buaya, Bukit Tagar, dan Slim River.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *