மாணவர்களை ''சீனாவுக்குப் போ' என்று கூறுவதா? இனவாத ஆசிரியை மீது விசாரணை!

- Muthu Kumar
- 25 Mar, 2025
புத்ராஜெயா, மார்ச் 25-
மலாய்மொழியைப் புரிந்து கொள்ள முடியாத மாணவர்களை "சீனாவுக்கே திரும்பிச் செல்லுங்கள் என்று கூறிய ஆசிரியை மீது கல்வியமைச்சு உள்நிலை விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்து போலீஸ் விசாரணையும் நடைபெறும் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் நேற்று தெரிவித்தார்.
பள்ளிகளில் இனவாதத்தை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். இனவாதத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், மாணவர்கள் அல்லது அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களின் நடவடிக்கைகளை கல்வியமைச்சு சகித்துக் கொள்ளாது. இந்த விவகாரத்தைப் பொறுத்த மட்டில், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது உள்நிலை விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விசாரணையின் முடிவுகளுக்கேற்ப அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ஃபட்லினா.
மலாய்மொழியைப் புரிந்து கொள்ள முடியாத இடைநிலைப் பள்ளி மாணவர்கள் சிலரை சீனாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள் என்று கூறியதை சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளார்.அது குறித்து கருத்துரைக்கும்படி செய்தியாளர்கள் வினவியதற்கு ஃபட்லினா இவ்வாறு கருத்துரைத்தார்.
Seorang guru yang mengarahkan pelajar tidak fasih bahasa Melayu untuk "pulang ke China" sedang disiasat oleh Kementerian Pendidikan dan polis. Menteri Pendidikan, Fadhlina Sidek, menegaskan kementerian tidak akan bertolak ansur terhadap perkauman dan tindakan akan diambil berdasarkan hasil siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *